வத்தலகுண்டு: முத்தாலம்மன் கோயில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே ஜி. தும்மலப்பட்டியில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 

இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், பழனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியில் சீறிப்பாய்ந்து முதலிடம் பிடித்த காளைகளுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி