வத்தலகுண்டு காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தினர் நூதன மோசடியில் ஈடுபட்டதைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறி பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாஜகவினர் கூட்டமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமிடம் தனியார் நிதி நிறுவனத்தினர் வைத்தியலிங்கத்தை மிரட்டுவதாகவும் அவர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதால் அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுத் தரும்படியும் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி