மாநில குழு உறுப்பினர் சிவக்குமார் வரவேற்றுரை இட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், சி ஐ டி யு தொழிற்சங்க நிர்வாகி குணசேகரன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்கள் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி கோசமிட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குப்புசாமி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
காத்திருப்பு போராட்டத்திற்கு வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் தீவிர பாதுகாப்பு அளித்தனர். 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.