நிலக்கோட்டை மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தங்கத்தின் விலைக்கு நிகராக மல்லிப்பூவும் விலை உயர்ந்துள்ளது. முல்லைப்பூ ரூ.1,800க்கும், பிச்சிப்பூ ரூ.1,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்ததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்தானதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.