திண்டுக்கல்: டிப்பர் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

வத்தலக்குண்டு அருகே டூ வீலர் மீது டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் (60) மனைவி ஜோதி மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் சிறுமி வர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காத்தவராயன் மற்றும் ஜோதி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருவீடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி