ஊர்மெச்ச காதணி விழா நடத்திய தாய் மாமன்

நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தில், செந்தில்குமார் - மாலியபுரம் தம்பதியினரின் குழந்தைகள் அஸ்வினி மற்றும் தாமோதரனுக்கு காதணி விழா நடைபெற்றது. தாய் மாலியபுரத்தின் சகோதரர் வேல்முருகன், தனது சகோதரி பிள்ளைகளுக்காக 200க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களுடன், 20க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் 4 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த சீர்செனத்தியுடன் நடைபெற்ற காதணி விழா கிராம மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி