குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை பகுதியில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. தினமும் சேவல், அன்னம், மயில், காளை, சிங்கம், ஆட்டு கிடா உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். பிப்ரவரி 12-ம் தேதி காலை திருத்தேர் ஏற்றமும், மாலை தேரோட்டமும் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி