மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
இதேபோல் ஆர் எம் காலணியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
எரியோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது
இதேபோல்
சின்னாளபட்டி அம்பாத்துரை சாலை கரியன் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் புற்றுக் கோவிலில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தேவி கருமாரியம்மனின் உற்சவ சிலை வைக்கப்பட்டு அதற்கு, பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்தனர். அதன்பின்னர் கம்பங்கூல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.