கொடைக்கானல் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிராத்தனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, அவர்கள் விரும்பும் இனிப்புகள், பலகாரங்கள், படையல்கள் இட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். கல்லறைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி, மாலைகள் அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்து, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி