திண்டுக்கல்: குற்றவாளிகளை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணியில் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சூரிய நாராயணன், குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே உள்ள தனது தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டார். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில், இருவர் தூணில் கட்டிவைக்கப்பட்டு சூரிய நாராயணன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கொலை சம்பவத்தை அடுத்து, கொலை குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி