தேர்தலில் வாக்குரிமையை புறக்கணிப்போம் போஸ்டரால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சீர்மரபினர் நலச்சங்கம், பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பில், டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 17-ம் தேதி நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஒரு நாள் காவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்தில், டிஎன்டி தங்கள் உரிமை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்குரிமையை புறக்கணிப்போம் என்றும், தமிழகத்தில் உள்ள சீர்மரபினர் சமூக மக்களுக்கு உடனடியாக டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி