மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கருப்பையா பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவரது மனைவி பாப்பாத்தியும் படுகாயத்துடன் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது