இதனிடையே நிகழ்வு நேரத்தில் வீட்டின் குளியலறைக்குள் சென்ற பள்ளி மாணவி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. வீட்டிலிருந்தவர்கள் குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது துப்பட்டாவில் தூக்கிலிட்டுக் கொண்டிருந்தார். மாணவியை மீட்டுப் பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்