கொடைக்கானல் ஏரிப் பகுதியில் இறந்த தனது குட்டியை கையில் ஏந்தியபடி தாய் குரங்கு அங்கும் இங்கும் திரிந்த காட்சி, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகமான சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, தாய் குரங்கின் பாசப் போராட்டத்தைக் கண்டு பலரும் கண்கலங்கினர்.