இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமான இன்று (மார்ச் 3), நிலவு சிவப்பு நிறத்திலும் நீல விளிம்புடனும் காட்சியளிக்கும். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து வளைந்து செல்வதால் நீல ஒளி சிதறி, சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைவதால் அது அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இது 'பிளட் மூன்' எனப்படுகிறது. கொடைக்கானலில் மாலை 6:30 முதல் 6:47 வரை பகுதி சந்திர கிரகணம் தென்படக்கூடும். மேகமூட்டம் இல்லையேல், கிழக்கு திசையில் இதைக் காணலாம் என இந்திய வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.