மலை பகுதியில் நிலச்சீரமைப்பு மேற்கொள்வதால் நிலச்சரிவு அபாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டியில் தடை செய்யப்பட்ட பொக்லைன், மண் அள்ளும் இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் மறைத்து வைக்கப்பட்டு தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. வில்பட்டி ஊராட்சி நுழைவுப் பகுதியில் வணிக நோக்கத்துடன் சரிவான பகுதியில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நிலங்கள் குடையப்படுவதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அனுமதியின்றி நடக்கும் இந்த இயந்திரப் பணிகளை ஆய்வு செய்து, மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி