இதைத் தொடர்ந்து கம்பம் நடராசன் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திங்கள்கிழமை இரவு மது விற்பனை நடைபெற்ற இடத்துக்குச் சென்று மதுபாட்டில்களை உடைத்தும், கூடாரத்தை சேதப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்அறிந்த கொடைக்கானல் போலீசார் அங்கு சென்று மதுபாட்டில்களை விற்ற பாண்டி என்பவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர் கூறியதாவது: கொடைக்கானலில் பல இடங்களில் இரவு, பகலாக சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து பல முறை போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.