இந்த நிலையில் வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மேகலா (35), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் மருத்துவ வசதி இல்லாத நிலையில் நேற்று இரவு அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வன பகுதிகளுக்கு இடையே மேகலாவை டோலி கட்டி கும்பக்கரை வழியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரவு நேரத்தில் ஆப்பாதான வழியிலும், ஆற்றை கடந்தும், வன விலங்குகளின் அச்சுறுத்தல் இடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் சிரமப்பட்டு கொண்டு சென்றுள்ளனர்.
துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெள்ளகெவி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.