கொடைக்கானல்: காட்டுத் தீ பரவியதால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பழனி மற்றும் வத்தலகுண்டு பகுதியிலிருந்து மலைச்சாலையில் அதிகம் வருவது வழக்கம். இந்நிலையில் பழனி அடிவாரப் பகுதியிலிருந்து கொடைக்கானல் மற்றும் கொடைக்கானலிலிருந்து பழனி செல்லும் பாதையில் காட்டுத்தீ பரவியது. இதனால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானலிலிருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். 

மேலும் இவர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இதனால் கொடைக்கானல் முதல் பழனி வரையுள்ள மலைச்சாலையில் சிறிது அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் சில மாதங்களாக பனிப்பொழிவு அதிகமாகவும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் இதுபோன்று காட்டுத்தீகள் அதிகமாக பரவுவதற்கு நேரிடும். இதனால் வனத்துறையினர் காட்டுத்தீ ஏற்படாத வகையில் அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி