கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி இரவு ஒரு மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் சிறுமியுடன் ஒமேகா ஒன்று டிவி அப்ளிகேஷனில் விளையாடும் போழுது முன் பின் தெரியாத வட மாநில இளைஞர் உன்னால் ஐ லவ் யூ சொல்ல முடியுமா என்று சவால் விட்டுள்ளார். அப்போழுது சிறுமியும் விளையாட்டாக ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். அதனை வடமாநில இளைஞர் ஐ லவ் யூ டூ என்று மாற்றி அதனை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து கொடைக்கானல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து சிறுமியின் வீடியோவை பதிவேற்றம் செய்த நபர் தினேஷ் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் தினேஷ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.