இந்நிலையில் இன்று (பிப்.6) கொடைக்கானல் எம்.எம். தெரு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த தெருநாய் அங்கு பள்ளிக்கு வந்து கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியதில் குழந்தை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் இதனைப் பற்றி கொடைக்கானல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் கொடைக்கானலில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தெருநாய்களை கொல்லக்கூடாது என்று ப்ளூ கிராஸ் எனும் அமைப்பினர்களால் நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்துள்ளனர்.
மேலும் இத்தடையை வாங்கி வைத்துள்ள குழுவினர் தாங்கள் சொகுசு பங்களாக்களில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட கொடைக்கானல் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு தலையிட்டு கொடைக்கானல் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் தெருநாய்களை கட்டுப்படுத்தி, தெருநாய்களிடமிருந்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளை காக்க வேண்டும் என்று கொடைக்கானல் வாழ் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.