திண்டுக்கல்: கல்லுாரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

திண்டுக்கல் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபு செந்தில்குமார் என்பவர் விடுதி மாணவிகள் மற்றும் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு புகார் வந்தது. 

இதையடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபு செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கல்லூரியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை கல்லூரி முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். அதில் நூலகத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் விடுதியை முடக்க உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி., மதுமதி கூறுகையில், "இதுவரை எவ்வித புகாரும் எனக்கு வரவில்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி