கொடைக்கானல்: மது பாட்டில்களை சாலையில் உடைத்து போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலை முதல் பழனி பிரிவு பிரதான சாலையில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காட்சி, மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெண்கள் ஒன்று கூடி கள்ள சந்தையில் விற்பனை செய்யும் மது பாட்டில்களை சூறையாடி சாலையில் உடைத்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், பொது வணிக வளாகங்கள் அதிகம் இருப்பதால் சட்டவிரோதமாக நடத்தப்படும் மதுபான கூடாரம் இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி