கொடைக்கானல்: பிக்கப் வாகனம் பிரேக் செயலிழந்ததால் பறிபோன உயிர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுறம் பகுதியில் இன்று காலை பிரபா வாகனம் ஓட்டி பிக்கப் வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு நாயுடுபுரம் வழியாக பெரும்பள்ளம் சென்றுகொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக ஏற்றம் உள்ள சாலையில் வாகனத்தை இயக்கிய போது வாகனத்தின் பிரேக் செயலிழந்து வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. 

அச்சமயம் சகாயம் வயது 50 மதிக்கத்தக்க ஆண் தன்னுடைய சுற்றுலா வழிகாட்டி பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தாக கூறப்படுகிறது. மேலும் வாகனம் பின்னோக்கி வந்ததால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வந்ததால் அவரின் மேல் இடித்து அருகாமையில் உள்ள தடுப்பின் சுவர் மேல் மோதி நின்றது. 

இதில் முதியவர் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததில் பேரில் விரைந்து வந்த கொடைக்கானல் காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து வாகனத்தை ஓட்டிய பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் சகாயம் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இடையே பதற்றம் நிலவியது.

தொடர்புடைய செய்தி