கொடைக்கானல்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - பொருட்கள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திடீர் தீ விபத்து காரணமாக, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. உகார்தே நகர் பகுதியில் வசித்து வரும் ராஜா மற்றும் கிறிஸ்டின் ஆகியோர் வீட்டில், இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறினர். இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி