கொடைக்கானல்: வனத்துறையினருக்கும், சுற்றுலாப்பயணிக்கும் தகராறு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மலேசியாவைச் சேர்ந்த அனுஷ்ரா உள்ளிட்ட சிலர் காரில் சுற்றுலா வந்தனர். வனப் பகுதியிலுள்ள குணர் குகை பகுதியில் இவர்கள் தங்களது காரை நிறுத்தினர். அப்போது வனப் பணியாளர்கள் அவர்களிடம் வாகனக் கட்டணம் கேட்டனர். 

இதுதொடர்பாக மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், வனப் பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி