கொடைரோடு அருகே பள்ளப்பட்டி சிப்காட் பிரிவில் ஓட்டலுக்கு செல்ல கார் திடீரென நின்றதால், பின்னால் வந்த 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கார்கள், வேன் மற்றும் தனியார் கல்லூரி பேருந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்மையநாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.