திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெட்ரோல் பங்க் அருகே கடந்த மாதம் விஜயபிரபு என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக நிலக்கோட்டை கணவாய்ப்பட்டியைச் சேர்ந்த முத்து மற்றும் சங்கிலி ஆகிய இருவரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இவர்களின் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.