கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா

கொடைக்கானலில் உள்ள குறிஞ்சியாண்டவர் கோயில், 1936-ல் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் உப கோயிலான இங்கு, குறிஞ்சி மலர்கள் பூத்ததால் குறிஞ்சி ஆண்டவர் என அழைக்கப்படுகிறார். மலர் வழிபாட்டு விழாவையொட்டி, கோயில் முழுவதும் டன் கணக்கிலான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் பூக்களால் கோலம் போடப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி