திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ. ஆ. ப. , அவர்கள் பண்ணைக்காடு பரிசோதனை மையத்தில் இன்று (15. 03. 2025) ஆய்வு மேற்கொண்டார். தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்களை சுற்றுலா பயணிகள் கொண்டு செல்கிறார்களா என்பதை கவனித்து அறிவுரை வழங்க அறிவுறுத்தினார்.