திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திண்டுக்கல் மாவட்டம் தான் அரசுப் பணியில் முதன்முதலில் சேர்ந்த பயிற்சி மாவட்டம் என்றும், அதே மாவட்டத்தில் தற்போது ஆட்சியராகப் பணியாற்றுவது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.