திண்டுக்கல்: பொது மக்களால் அடித்து சூறையாடப்பட்ட டோல்கேட்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு லட்சுமிபுரம் அருகே புதிதாக டோல்கேட் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சேர்ந்து டோல்கேட் அடித்தனர். முன்னதாக டோல்கேட் பணி நடந்துகொண்டிருக்கும் போதே நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் இன்று திறக்கப்படவிருந்த நிலையில் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், போக்குவரத்து வாகனங்களின் ஓட்டிகள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து டோல்கேட் அடித்து சூறையாடிவிட்டனர். தகவல் அறிந்து பட்டிவீரம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் நிலக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி