திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் சீனிவாசன், திமுக வேட்பாளர் செந்தில்குமாரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். திண்டுக்கல்லிற்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது உள்ளிட்ட தனது சாதனைகளை மாநகராட்சி அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அவர் கூறினார். மேலும், "திண்டுக்கல் யாருடைய கோட்டை எனப் பார்த்துவிடலாம்" என சீனிவாசன் சவால் விடுத்தார்.