திண்டுக்கல்: தந்தை வெட்டிக் கொலை; மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயி பாண்டி (70) மற்றும் அவரது மனைவி மீனாட்சி (65) ஆகியோரை, சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்ட மகன் சுருளி (45) சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த தம்பதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பாண்டி உயிரிழந்தார். மீனாட்சி சிகிச்சை பெற்று வருகிறார். அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து சுருளியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி