நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பல் மீது சூர்யா கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி சிவக்குமார் மற்றும் மணிகண்டன் உட்பட 6 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனிடையே சிவக்குமார் மற்றும் மணிகண்டன் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தனக்கும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யா திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம் புகார் அளித்தார்.