திண்டுக்கல்: சர்வீஸ் மையத்தில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் உள்ள அஜீஸ் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களைச் சுத்தம் செய்யும் வாட்டர் சர்வீஸ் மையத்தில், ஊழியர்கள் சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பழைய இரும்புப் பொருள்களுக்குள் பதுங்கியிருந்த பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி