திண்டுக்கல்: பெண் ஊழியர்களை இழிவாக மெயில் அனுப்பிய சக ஊழியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு துணை மின்நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் சக பெண் ஊழியர்களை, ஆபாசமாக சித்தரித்து மெயில் அனுப்பிய விவகாரம் தற்போது வெளியே கசிந்து அரசுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு வத்தலக்குண்டு துணை மின்நிலையத்தில் பணிபுரியும் உதவி மின் பொறியாளர் ஒருவரின் மெயில் ஐடியில் இருந்து, வத்தலக்குண்டு கோட்டத்தில் உள்ள அனைத்து மின் உதவி பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் என அனைவருக்கும் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. 

அந்த மெயிலில், 'இரவு நேர இன்பத்திற்கு அழைக்கவும் விடிய விடிய ரூ. 100 என அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் பெயர் மற்றும் செல் நம்பரை பதிவிட்டு அதற்கு கீழே அப்பப்போ. இலவசம்' என மற்றொரு பெண் ஊழியர் பெயர் மற்றும் அந்தப் பெண் ஊழியரின் செல்போன் நம்பரை பதிவிட்டு இந்த வாசகங்கள் அடங்கிய மெயில் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதை பார்த்து விட்டு கதறி அழுதவாறே பாதிக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர்கள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் உடனே புகார் அளித்தனர். 25 நாட்களுக்கு மேலாகியும் கூட இன்னும் சைபர் க்ரைம் போலீசிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி