சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டியைச் சேர்ந்த தவெக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று அமைச்சர் இ. பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களை என்றும் கைவிட மாட்டேன் என அமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுகவினர் செய்திருந்தனர்.