திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பாலமுருகன் (35) என்பவரை 3 பேர் வழிமறித்து அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த பாலமுருகன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.