திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, குன்னுவராயன்கோட்டையைச் சேர்ந்த பாண்டீஸ்வரி(36) என்பவர், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று, தனது பாதை பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, பெட்ரோல் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்தப் பெண்ணின் பெட்ரோல் கேனைக் கைப்பற்றி, மனு அளிக்க அறிவுரை வழங்கினர்.