நிலக்கோட்டை: வீடு புகுந்து 2½ பவுன் நகை அபேஸ்

நிலக்கோட்டை பெரியார் காலனியில் ஆசிரியர் கார்த்திகேயன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி