திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியில் விவசாய நிலத்தில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு வலையில் சிக்கி உயிருக்குப் போராடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.