திண்டுக்கல்: சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்ற 2 வாலிபர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நிதி குமார், சார்பு ஆய்வாளர் சுரேஷ் பாபு மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரபு மற்றும் ராஜா ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி