மதுரையை சேர்ந்தவர் ராணி. இவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் துவரங்குறிச்சி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நத்தம் மங்கம்மாசாலை பகுதியில் வந்து போது ஆடு ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததில் பைக்கில் இருந்து 4 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த ராணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் நேற்று (மே 16) உயிரிழந்தார்.