வேம்பார்பட்டி சவேரியார் சர்ச், கொசவபட்டி உத்திரியமாதா சர்ச் விழா சப்பர பவனி!

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி புனித சவேரியார் சர்ச் விழா மே 15 ல் கொடியேற்றத்து டன் தொடங்கியது. மறுநாள் இரவு சப்பரபவனி நடந்தது. நேற்று சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டம் நடைபுபெற்றதை தொடர்ந்து மதியம் சப்பரப வனி நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை காணிக்கையாக வழங்கிவழிபட்டனர். மத நல் லிணக்கத்தை பேணும் வகையில் வேம்பார்பட்டி ஜமாத்திலிருந்து இஸ் லாமியர் சார்பாகவும், ஹிந்து அமைப்பினர் சார்பாகவும் சப்பரபவனியை வரவேற்று கருப்பட்டி, வெள்ளரி, வாழைப்பழம் பொருட்களை காணிக்கையாக வழங்கினர். இதே போல் கொசவபட்டி புனித உத்திரிய மாதா சர்ச் 40ம் நாள் விழா வையொட்டி சப்பர பவனி நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். சப்ரபாணியை தொடர்ந்து கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், சிலம் உள்ளிழ்ச்சிகிரா பாட்டம் பாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சி நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி