வடமதுரை: உறவினரை கத்தியால் வெட்டிய இளைஞர்

திண்டுக்கல், வடமதுரை அருகே தென்னம்பட்டியை சேர்ந்த சங்கர்(42) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் கௌதம்(20) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தென்னம்பட்டி அருகே சங்கரை உறவினரான கௌதம் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு கௌதமை வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி