இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி சம்பந்தப்பட்ட இறைச்சிக்கடைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதில் பழைய இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இறைச்சிக்கடையை மூடி சீல் வைத்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறியபோது, வடமதுரையில் சில இறைச்சிக்கடைக்காரர்கள் இறந்த ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக லாபம் பெறும் நோக்கில் விற்பனை செய்கின்றனர். எனவே இறைச்சி வாங்கும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆட்டுக்காலில் புழுக்கள் நெளிந்த காட்சிகளின் வீடியோ அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு