கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சிறப்பு விருந்தினராக வடமதுரை பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா பங்கேற்று கருத்துரை ஆற்றினார். அங்கன்வாடி பணியாளர் தமிழரசி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பெண் தொழில் முனைவோர் தாங்கள் எவ்வாறு செயல்பட்டு வெற்றி அடைந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுய தொழில் தொடங்க என்னென்ன திட்டங்கள், அரசின் சலுகைகள் உள்ளது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவரிடமும் கேள்விகள் கேட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.