திண்டுக்கல் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏ. வெள்ளோடு பகுதியில், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முருகன் ஏற்பாட்டில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், கழகத் துணைப் பொதுச்செயலாளருமான நத்தம் சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் சிலையைத் திறந்து வைத்து, எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவச சேலை, வேட்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.