சாணார்பட்டி கோபால்பட்டி காந்திநகரை சேர்ந்த மாற்றுத்தினாளி ஓமியோபதி டாக்டர். செந்தில்குமார் (45). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குமரேசன் (38). இவர் நத்தம் மலையூரில் அரசு துவக்கபள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களின் வீட்டின் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குமரேசன், அவரது மனைவி கார்த்தீஸ்வரி (38), ஆகிய 2 பேரும் செந்தில்குமாரின் வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தையால் பேசி அவரையும், அவரது மனைவி தனலெட்சுமியையும் தாக்கினர். சாணார்பட்டி எஸ். ஐ. , பரமசாமி, பொன் குணசேகர் வழக்குபதிந்து தலைமறைவான குமரேசன், அவரது மனைவியை மதுரை தமுக்கம் மைதானம் அருகே வைத்து கைது செய்தனர்.